Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முழுநேர தேசிய சேவையாளர் லியு காய் மரணம் தொடர்பான படங்களை வெளியிட்ட மூவருக்கு அபராதம்

சிங்கப்பூரின் முழுநேர தேசிய சேவையாளர் லியு காயின் (Liu Kai) மரணம் தொடர்பான படங்களை வெளியிட்ட மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் முழுநேர தேசிய சேவையாளர் லியு காயின் (Liu Kai) மரணம் தொடர்பான படங்களை வெளியிட்ட மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் அவர்களுக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி Bionix வாகனமும் Land Rover வாகனமும் விபத்தில் சிக்கின.

அப்போது முகமது அரிஃப் அஸ்மான் என்னும் 22 வயது ஆடவர் அந்த விபத்து தொடர்பான 2 படங்களை எடுத்து வெளியிட்டார்.

அதற்காக அவருக்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக 21 வயது பிரான்டன் டானுக்கும், 24 வயது முகமது ஸாக்கிக்கும் ஆளுக்கு 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் விதிக்கப்பட்ட மூன்று முழுநேர தேசிய சேவையாளர்களும், சம்பவம் நடந்தபோது ஜூரோங் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்