Images
  • bionix
    (கோப்புப் படம்)

முழுநேர தேசிய சேவையாளர் லியு காய் மரணம்: Bionix வாகனப் பாதுகாப்பில் மேம்பாடுகள்

இராணுவப் பயிற்சிகளின் போது பாதுகாப்பை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக Bionix காலாட்படை வாகனத்தில் மேம்பாடுகள் செய்யப்படுவதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் இன்று (பிப்ரவரி 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் முழுநேர தேசிய சேவையாளர் லியு காய் மாண்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவ்வாறு செய்யப்படுகிறது.

அதோடு அதிக அபாயம் உள்ள அனைத்துப் பயிற்சிகளின்போதும் கூடுதல் அனுபவமுள்ள பயிற்றுவிப்பாளர்கள் இருக்க இனி ஏற்பாடு செய்யப்படும்.

நவம்பர் 3ஆம் தேதியன்று Bionix வாகனம் பின்னால் நகர்ந்து Land Rover வாகனம் மீது மோதிய போது Land Rover வாகனத்தில் இருந்த 22 வயது முதல் நிலைக் கார்ப்பரல் லியு மாண்டார்.

அதன் பின் அனைத்து Bionix வாகனங்களின் பின்புறத்தில் மேலும் 2 மின் ஹாரன் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டாக்டர் இங் கூறினார்.

அதோடு வாகனங்களுக்குப் பின்னால் இருப்பதைப் பார்க்க உதவும் கேமராக்கள் படிப்படியாகப் பொருத்தப்படும்.

அதற்கான பணி அடுத்த மாதம் தொடங்கும். 

Top