Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Bionix விபத்து: அலுவலக ரகசியச் சட்டத்தை மீறியதாக முழுநேரத் தேசிய சேவையாளர் ஒப்புக்கொண்டார்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசியச் சேவையாளர் துங் யு ஷுவான் (Thng Yu Xuan), அலுவலக ரகசியச் சட்டத்தை மீறியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
Bionix விபத்து: அலுவலக ரகசியச் சட்டத்தை மீறியதாக முழுநேரத் தேசிய சேவையாளர் ஒப்புக்கொண்டார்

(படம்: Howard Law/ CNA)


சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசியச் சேவையாளர் துங் யு ஷுவான் (Thng Yu Xuan),
அலுவலக ரகசியச் சட்டத்தை மீறியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

2018 நவம்பரில், சிங்கப்பூர் ஆயுதப் படை மேற்கொண்ட பயிற்சியின்போது விபத்து ஏற்பட்டது. Bionix வாகனமும், Land Rover வாகனமும் மோதிக்கொண்டன.

Land Roverஐ ஓட்டிய 22 வயது Corporal First Class லியு காய் (Liu Kai) மோதலுக்குப் பின் மாண்டார். அவரது உடலை வெளியே எடுக்கும் பணிக்கு அனுப்பப்பட்ட குழுவில் துங்கும் இருந்தார்.

சம்பவம் தொடர்பான படங்களை WhatsApp குழுவில் உள்ள 5 பேருக்கு அவர் அனுப்பினார்.

அப்போது அவருக்கு 20 வயது என்பதைக் கருத்தில்கொண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கும்படி துங்கின் வழக்குரைஞர் கேட்டுக்கொண்டார்.

துங் விபத்து நேர்ந்த இடத்தைப் பார்த்து அதிர்ச்சியும் பீதியும் அடைந்ததால், நண்பர்களை எச்சரிக்கும்பொருட்டு விபத்து தொடர்பான படங்களை அனுப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடந்த தவறுக்குத் தாம் முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும், தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துங் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதைச் சுட்டி அவரது பெற்றோர் நீதிமன்றத்துக்கு கருணை மனு கொடுத்துள்ளனர்.

தீர்ப்பு அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்