Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மிதக்கும் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றார் அமைச்சர் லாம்

தஞ்சோங் பகார் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தங்குமிடங்களில்  வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 1,500 பேர் வசித்து வருவதாக, சுகாதார, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் (Lam Pin Min) தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
மிதக்கும் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றார் அமைச்சர் லாம்

படம்: Lam Pin Min/Facebook

தஞ்சோங் பகார் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தங்குமிடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 1,500 பேர் வசித்து வருவதாக, சுகாதார, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் (Lam Pin Min) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிலரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு டாக்டர் லாம் பேசினார். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு, மாற்று வசிப்பிடமாக, மிதக்கும் தங்குமிடங்கள் உள்ளன.

அங்கு வசிக்கும் ஊழியர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அதனால், ஓர் அறையில் நால்வர் மட்டுமே வசிக்கின்றனர்.

தினமும் இருமுறை ஊழியர்கள் தங்களது உடல்வெப்பநிலையைச் சோதிக்க வேண்டும்.

முடிதிருத்தும் சேவை, மளிகைக் கடை, வெளிநாட்டிற்குப் பணம் அனுப்பும் சேவை ஆகிய வசதிகளும் அங்கு உள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்