Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எந்தச் சூழலிலும் பிறந்தநாளை மனநிறைவுடன் கொண்டாடும் இளையர்கள்

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே குதூகலம் தான்.

வாசிப்புநேரம் -

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே குதூகலம் தான்.

அதுவும் இளையர்கள்...எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாள் அது.

சிங்கப்பூரில் உள்ள பல இளையர்கள், தங்கள் பிறந்தநாளைத் திட்டமிட்டுச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இப்போதுள்ள சூழலில் கொண்டாட்டங்கள் அவ்வளவாக இல்லை.

பிறந்தநாளை எவ்வாறு வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும், எதில் மனநிறைவு கண்டனர் என்று சில இளையர்கள் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

இரண்டு நாளாகப் பிரித்துக் கொண்டாடலாமே!

இந்த ஆண்டு எனது பிறந்த நாளை இரண்டு வெவ்வேறு தேதிகளில் நெருங்கிய நண்பர்களோடு மட்டும் கொண்டாடினேன்.
இருப்பினும், நன்றாகவே இருந்தது.

- தேவப்பிரியா, வயது 24


தொழில்நுட்ப முன்னேற்றங்கள், விநியோக தளங்கள்... பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஒரு குறையும் இல்லை!

- மாலா, வயது 26

நான் தரமான நேரத்தைச் செலவிட விரும்புவேன். பிறந்தநாளை மாறுபட்ட வழியில் கொண்டாடினாலும், என்னை சுற்றியுள்ளோர் என் மீது கொண்ட அன்பை நினைவூட்டும் வகையில், எனக்குச் சிறிய பரிசுகள், பிறந்தநாள் அட்டைகள், குறுந்தகவல்கள் அனுப்பினர். மிகவும் திருப்தியாக இருந்தது.


- V ஜனனி, வயது 24


அன்பானவர்கள் எத்தனை பேர் நம்மைச் சுற்றி? அதில் தான் இருக்கிறது கொண்டாட்டம்!

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருக்க ஆயிரம் வழிகள்! என்னைச் சுற்றியிருக்கும் அன்பானவர்களை நினைத்து ஆனந்தமாகக் கொண்டாடினேன்.


- பிரித்தாஷினி, வயது 24


உணர்வுபூர்வமாக அனைவருடனும் இணைந்திருப்பதும் கொண்டாட்டம் தானே!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆட்டம், பாட்டம் இல்லை என்றாலும், அவை ஆழமான உணர்வுகளைக் கொண்டிருந்தன. அதில் முழுமையை உணர்ந்தேன்..... மகிழ்ந்தேன்!


- ஞா. சத்தீஸ்வரன், வயது 25

சூழல் எப்படி இருந்தாலும், கொண்டாட்டத்தின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்துகொண்டால், எல்லாம் இன்பமயம் என்கின்றனர் இந்த இளையர்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்