Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசிய உணவு வகைகளைச் சுவைத்துப் பார்க்க ஆசையா? பீஷான்- அங் மோ கியோ பூங்காவுக்குச் செல்லலாம்!

வெளியுறவு அமைச்சு குடியிருப்பு வட்டாரங்களில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசிய உணவு வகைகளைச் சுவைத்துப் பார்க்க ஆசையா? பீஷான்- அங் மோ கியோ பூங்காவுக்குச் செல்லலாம்!

(படம்: வெளியுறவு அமைச்சு)

பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் இன்றிலிருந்து வார இறுதிவரை ஆசியான் விழா களைகட்டவிருக்கிறது.

ஆசியான் வட்டாரத்தின் பிரபல உணவு வகைகள், கேளிக்கை அம்சங்கள், கலைப் படைப்புகள், பயிலரங்குகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஆசியான் கூட்டத்துக்குச் சிங்கப்பூர் தலைமைதாங்கவுள்ளது.

அதனையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

வெளியுறவு அமைச்சு குடியிருப்பு வட்டாரங்களில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

பீஷான்- அங் மோ கியோ பூங்காவில் இன்று மாலை 6 மணிக்கும் வார இறுதியில் காலை 11 மணிக்கும் நிகழ்ச்சிகள் தொடங்கும்.

அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தையும் ஆசியானையும் கொண்டாடும் விதமாய்க் குடியிருப்பு வட்டாரங்களில் நிகழ்ச்சிகள் நடப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்