Images
  • bitcoin-1
    படம்: Pixabay 

மின்னிலக்க நாணய முதலீடுகளை ஊக்குவிக்கும் போலி அறிக்கைகள் குறித்து காவல்துறையிடம் புகார்

சிங்கப்பூரில் மின்னிலக்க நாணய முதலீடுகளை ஊக்குவிக்கும் போலித் தகவல்கொண்ட இணைய அறிக்கைகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடையில் அதன் காரணமாக சுமார் 78,000 வெள்ளி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.

அதிக இலாபம் ஈட்டலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களைக் குறிவைத்து இணைய அறிக்கைகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றில் பிரபலங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

அத்தகைய விளம்பரங்கள் கண்டு தங்களின் விவரங்களைப் பதிவுசெய்வோரை ஒரு பிரதிநி தொடர்புகொள்வார். 

மின்னிலக்க நாணயத் திட்டங்கள் குறித்து கவனமாய் இருக்கும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர் நாணய வாரியம் மின்னிலக்க நாணயங்களை முறையாக ஒழுங்குபடுத்தவில்லை என்பதையும் அதிகாரிகள் சுட்டினர்.


Top