Images
  • bke fire (1)
    (படம்: Christopher)

புக்கிட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றிய கனரக வாகனம்

புக்கிட் தீமா விரைவுச் சாலை வழியாகத் தீவு விரைவுச் சாலையை நோக்கிச் சென்ற கனரக வாகனம் ஒன்று தீப்பற்றிக் கொண்டது.

நேற்று (செப்டம்பர் 13) மாலை சுமார் 5 மணி அளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினருக்குச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வாகனத்திலிருந்து கரும்புகை கிளம்ப, சுமார் 6 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர்.


சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தீ மூண்டதற்கான காரணம் தெரியவில்லை.

விசாரணை தொடர்கிறது.

இதற்கு முன் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 12) ஜூரோங் ஈஸ்ட் செண்ட்ரலில் தனியார் பேருந்து ஒன்று சாலையில் தீப்பற்றியது.




Top