Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்திய சுதந்திர தினத்தை 'கறுப்பு தினமாக' அனுசரிப்பதாக பாகிஸ்தானிய அரசாங்கம் அறிவிப்பு

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் தொடர்பில் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கான ஒருமைப்பாட்டையும், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்திய சுதந்திர தினத்தை 'கறுப்பு தினமாக' அனுசரிப்பதாக பாகிஸ்தானிய அரசாங்கம் அறிவிப்பு

(படம்: AP/ Dar Yasin)

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் தொடர்பில் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கான ஒருமைப்பாட்டையும், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினமான நேற்று அவர் உரையாற்றினார்.

இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர நாளான இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிடுகிறது.

அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை இந்தியா ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதன் நோக்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்