Images
  • blind-spot warning system (1)
    (படம்: Amir Yusof)

சிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் விவேக எச்சரிக்கை முறை

சிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் "விவேக எச்சரிக்கை முறை" அமைக்கப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரவு ஆணையம் இன்று (16 ஏப்ரல்) அறிவித்தது. 


வரும் திங்கட்கிழமையிலிருந்து, அதற்கான 6 மாத கால முன்னோட்டம் தொடங்கும். 

Integrated Smart Advanced Warning Unit (I-SAW-U) என்று அழைக்கப்படும் அந்த விவேக எச்சரிக்கை முறையில் 4 கேமராக்களும் 6 உணர்கருவிகளும் இருக்கும். 

இவை பேருந்தின் உச்சியிலும் பின் பக்கமும் பொருத்தப்பட்டுள்ளன.

ஓட்டுநரின் கண்ணுக்குப் புலப்படாமல் பேருந்துக்கு அருகில் சைக்கிளோட்டிகளும் பாதசாரிகளும் இருந்தால் அது பற்றி ஒருவித ஒலி எழுப்பப்படும்.


சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் இரண்டு வகை எச்சரிக்கை நிலைகள் உள்ளன. 

கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் உள்ள பொருட்கள் அல்லது நபரை அந்த வண்ண எச்சரிக்கை அடையாளம் காட்டும்.

ஏறக்குறைய 40 பேருந்து ஓட்டுநர்கள் இந்தப் புதிய எச்சரிக்கை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெற்றுள்ளனர். 

முன்னோட்டச் சோதனையின் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது. 

 

உங்கள் கருத்து

Top