Images
  • aum
    (படம்: Facebook/Boy Zam)

புளோக்கின் அடியில் வடகம் காயவைத்த மாதைச் சடலம் என்று நினைத்த ஆடவர்

புளோக்கின் கீழ்த்தளத்தில் வடகம் காயவைத்துக் கொண்டிருந்த மாதைச் சடலம் என்று நினைத்தார் ஆடவர் ஒருவர்.

புளோக்கின் அடியில் படுத்திருந்த நிலையில் காணப்பட்ட மாதைக் கடந்துசென்றபோது அவர் சடலம் என்று நினைத்துப் பதறிப்போனார் Boy Zam எனும் Facebook பயனீட்டாளர்.


சட்டென்று பார்க்கும்போது அவர் அணிந்திருந்த சேலையை ரத்தம் என்று நினைத்தார். கூர்ந்து பார்த்ததில் அவர் வடகத்தை வெயிலில் காய வைத்தார் என்பது தெரிந்திருக்கிறது.

இணைய வாசகர்களிடையே பரவிவரும் படங்களைப் பார்த்த சிலர் அவை நகைச்சுவையானவை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலரோ நகர்ப்புறத்தில் வடகம் காயவைக்கும் இந்தியர்களின் பழக்கத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

Top