Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இரத்த தானம் செய்யும் 800,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம்

சிங்கப்பூரில் இரத்த தானம் செய்யும் 800,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
இரத்த தானம் செய்யும் 800,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம்

(படம்: CNA)

(வாசிப்பு நேரம்: நிமிடம்)

சிங்கப்பூரில் இரத்த தானம் செய்யும் 800,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அறிவியல் ஆணையம் பணியமர்த்தியிருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அந்தத் தவற்றைச் செய்தது.

என்றாலும், தவறு பற்றித் தெரியவந்தவுடன் அந்தத் தகவல்கள் மீட்டுக் கொள்ளப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

பெயர்கள், அடையாள அட்டை எண், எத்தனை முறை இரத்த தானம் செய்துள்ளனர் போன்ற தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

இந்த மாதம் 13 ஆம் தேதி ஆணையத்தின் இணைய வல்லுநர்களுக்குப் பாதிப்புப் பற்றித் தெரியவந்தது. 

அவர்கள் உடனே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

இரத்த தானம் செய்வோரின் தகவல்களை எவரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தொடக்கநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆணையத்தின் இணையச் சேவை நிறுவனமான Secure Solution Group உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டோரிடம் ஆணையம் மன்னிப்புக் கோரியுள்ளது. இரத்த வங்கியின் மத்தியக் கட்டமைப்பில் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் ஆணையம் உறுதியளித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்