Images
  • blue plan (1)
    (படம்: Ria Tan/WildSingapore)

சிங்கப்பூரில் பாதுகாக்கப்படவேண்டிய 3 கரையோரப் பகுதிகள்

சிங்கப்பூரின் தெற்கில் உள்ள 3 கரையோரப் பகுதிகள், Singapore Blue Plan திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படவேண்டிய வட்டாரங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

செமாக்காவ் தீவு, ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள சத்துமு தீவுப் பகுதி, ஹந்து தீவு, ஜோங் தீவு, செக் ஜாவா (Chek Jawa) உள்ளிட்ட புலாவ் உபினின் கரையோரப் பகுதி போன்றவை அவற்றில் அடங்கும்.

செமாக்காவ் தீவையும், சத்துமு தீவையும் சுற்றியுள்ள வட்டாரங்கள் உடனடியாகப் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

நேற்று வெளியிடப்பட்ட ஆக அண்மைத் திட்டத்தில், மொத்தம் 6 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

செயிண்ட் ஜான்ஸ் தீவுகளுக்கும் சுங்கை பூலோ சதுப்புநிலப் பகுதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு தேவை என்பதும் அவற்றில் ஒன்று.

சிங்கப்பூரின் கடல் வாழ்விடக் கட்டமைப்பை, மேம்பட்ட முறையில் பாதுகாக்க, 100க்கும் அதிகமான சுற்றுப்புற நிபுணர்கள் இணைந்து 220 பக்கப் பரிந்துரையை வழங்கியுள்ளனர்.

தேசியப் பல்கலைக் கழகத்தின் துறைசார்ந்த நிபுணர்கள் தலைமையிலான குழு, கல்விமான்களோடும், சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான வழக்குரைஞர்களோடும் ஆலோசித்த பிறகு, சுமார் ஓராண்டில் அந்தப் பரிந்துரைகளை வரையறுத்தது.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, திட்டம் வெற்றிபெற சிங்கப்பூர் சமூகத்தின் ஈடுபாடு அவசியம் என்று வலியுறுத்தினார்.

அடுத்த வாரம் அந்தப் பரிந்துரைகள் அரசாங்கத்தின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும்.

Top