Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்சாரக் கார்களுக்கு மின்னூட்ட வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் அமைப்பதே இலக்கு: BlueSG

மின்சாரக் கார் பகிர்வுச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, கார்களுக்கு மின்னூட்ட வசதிகளை மிக அருகில் கொண்டு வருவது தனது இலக்கு என்று Blue SG நிறுவனம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

மின்சாரக் கார் பகிர்வுச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, கார்களுக்கு மின்னூட்ட வசதிகளை மிக அருகில் கொண்டு வருவது தனது இலக்கு என்று Blue SG நிறுவனம் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு மின்னூட்டும் வசதிகளை அதிகரிக்கவிருப்பதாக இன்று (டிசம்பர் 12) Blue SG அறிவித்தது. குறிப்பாக வீடமைப்புப் பேட்டைகளில் அதிக மின்னூட்ட வசதிகள் அமைக்கவுள்ளதாகக் கூறியது.

தற்போது நிறுவனத்திடம் 300 மின்சாரக் கார்கள் உள்ளன, 135 நிலையங்களில் 531 மின்னூட்ட வசதிகள் உள்ளன.
2020க்குள் 1,000 மின்சாரக் கார்களுடன் 2,000 மின்னூட்ட வசதிகள் கொண்ட 500 நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் நிறுவனம் நடத்திய ஆய்வில், வீட்டிலிருந்து 10 நிமிடம் நடக்கும் தொலைவில் Blue SG நிலையங்கள் உள்ளனவா என்று கேட்கப்பட்டதாக நிறுவனத்தின் வர்த்தக, கட்டமைப்பு இயக்குநர் ஜென்னி லிம் செய்தியிடம் கூறினார்.

"சுமார் மூன்றில் ஒரு பங்கினருக்கு வீட்டிலிருந்து 10 நிமிடம் நடக்கும் தொலைவில் Blue SG நிலையங்கள் இருக்கின்றன. இன்னும் மூன்றில் ஒரு பங்கினர் 10 நிமிடம் நடக்கும் தொலைவைத் தாண்டிய Blue SG நிலையங்களுக்குச் செல்கின்றனர்"

அதிக மின்சாரக் கார்களையும், மின்னூட்ட வசதிகளையும் வரவேற்கிறார் Blue SG கார்களைப் பயன்படுத்தும் மென்பொருள் பொறியாளர் திரு. செல்வமுத்துக்குமார். தற்போதுள்ள பயண அனுபவம் சுமுகமாக இருந்தாலும் அது இன்னும் வசதியாக இருக்கும் என்றார்.

"வழக்கமாகச் செல்லும் இடங்களுக்குச் செல்வதற்கு சுலபமாக உள்ளது. புது இடங்களுக்குச் செல்லும் போது Blue SG நிலையங்கள் அருகில் உள்ளனவா என்று முன்னதாகத் திட்டமிட்டுச் செல்ல வேண்டும்"

அமெரிக்க வேலை நேரத்துக்கு ஏற்ப வேலை செய்வதால் தாம் உச்சநேரப் போக்குவரத்தைத் தவிர்ப்பதாகக் கூறினார். இல்லாவிட்டால் காலை உச்ச நேரத்தில் மின்சாரக் கார்களுக்கான நிறுத்துமிடங்கள் கிடைப்பது கடினம் என்றார்.

Blue SG நிலையங்களும், அதன் கார்களும் அதிகரிப்பது அந்த தேவையை ஈடுகட்டுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்றார் திரு. செல்வமுத்துக்குமார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்