Images
  • trafficking
    (படம்: AFP/Valery Hache)

இரவு விடுதி நடத்திய இந்தியாவைச் சேர்ந்த தம்பதி மீது ஆட்கடத்தல் குற்றம் நிரூபணம்


போட் கீ (Boat Quay) பகுதியில் இரண்டு இரவு விடுதிகளை நடத்திவந்த தம்பதி மீது பதிவான சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

மல்கார் சவ்லாராம் ஆனந்த், பிரியங்கா பட்டாச்சார்யா ராஜேஷ் தம்பதி இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

பங்களாதேஷைச் சேர்ந்த 3 பெண்களைச் சட்டவிரோதமாக வேலையில் அமர்த்தியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மாதம் சுமார் 900 வெள்ளி சம்பளத்துக்காக இரவு விடுதிகளில் நடனமாடும் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் கடுமையான வேலை, வாழ்க்கைச் சூழலுக்கு ஆளானதாகத் தெரியவந்தது.

அவர்களில் ஒருவர் பாலியல் சேவைகளை வழங்கவும் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருவருக்கு மாதாந்தரச் சம்பளம் கொடுக்கப்படவில்லை.
மேலும் உடல்நிலை சரியில்லாதபோதும் வேலை செய்யவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த மாதம் 19-ஆம் தேதி தம்பதிக்குத் தண்டனை விதிக்கப்படும்.  

Top