Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் தீமா இயற்கைப் பூங்காவிற்கு அருகே மாதும் சிறுவனும் மாண்ட நிலையில் காணப்பட்டனர்

புக்கிட் தீமா இயற்கைப் பூங்காவிற்கு அருகே ஒரு மாதும் சிறுவனும் மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
புக்கிட் தீமா இயற்கைப் பூங்காவிற்கு அருகே மாதும் சிறுவனும் மாண்ட நிலையில் காணப்பட்டனர்

படம்: Raj Nadarajan/TODAY

புக்கிட் தீமா இயற்கைப் பூங்காவிற்கு அருகே ஒரு மாதும் சிறுவனும் மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டிருக்கும் லோராங் செசுவய் (Lorong Sesuai) பகுதியில் இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

இருவரின் மரணமும் இயற்கைக்கு மாறானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 6:45 மணிக்குக் காவல்துறையினருக்குத் தகவல் வந்தது.

மாண்ட பெண்ணுக்கு வயது 41, சிறுவனுக்கு வயது 5.

இருவரும் ஜப்பானியர்கள் என்றும் அவர்கள் தாயும் பிள்ளையும் என்றும் சீன நாளிதழான Shin Min Daily News தெரிவித்தது.

சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்