Images
  • sg covid (37)
    (கோப்புப் படம்: Gaya Chandramohan)

அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் ஒருமாத ஆண்டிறுதி போனஸ்

அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் ஒருமாத ஆண்டிறுதி போனஸ் வழங்கப்படும் என்று பொதுச் சேவைத்துறை தெரிவித்துள்ளது.

இளநிலை அதிகாரிகளுக்குக் கூடுதலாக 500 வெள்ளி வழங்கப்படும்.

COVID-19 நோய்ப்பரவலை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்க ஊழியர்கள் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஒருமாத போனஸ் வழங்கப்படுகிறது.

அரசாங்கத்துறைகளின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பொதுச் சேவைத்துறை குறிப்பிட்டது.

ஒருமாத போனஸோடு, 13வது மாதச் சம்பளம் என்று பரவலாகக் கூறப்படும், ஓய்வூதியம் அல்லாத ஆண்டுப் படித்தொகையாக ஒருமாதச் சம்பளத்தையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும்.

Top