Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்க ஊழியர்கள் 0.45 மாத ஆண்டு நடுப்பகுதி போனஸும் ஒரேமுறை வழங்குதொகையும் பெறுவர்

சிங்கப்பூரில், அரசாங்க ஊழியர்கள் 0.45 மாத ஆண்டு நடுப்பகுதி போனஸும் ஒரேமுறை வழங்குதொகையாகக் குறைந்தது 200 வெள்ளியையும் பெறவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரில், அரசாங்க ஊழியர்கள் 0.45 மாத ஆண்டு நடுப்பகுதி போனஸும் ஒரேமுறை வழங்குதொகையாகக் குறைந்தது 200 வெள்ளியையும் பெறவிருக்கின்றனர்.

பொதுச் சேவைப் பிரிவு இன்று அது குறித்து அறிவித்தது.

குறைந்த சம்பளம் பெறும் நான்காம், ஐந்தாம் படிநிலை ஊழியர்களுக்கு
ஒரேமுறை வழங்குதொகையாக 300 வெள்ளி வழங்கப்படும்.

அந்தக் கூடுதல் வழங்குதொகை மூலம், அரசாங்க ஊழியர்கள் கிட்டத்தட்ட 1400 பேர் பயன் பெறுவர்.

ஐந்தாம் படிநிலையைச் சேர்ந்த ஊழியர்கள், வருடாந்தரச் சம்பள உயர்வுடன், 50 வெள்ளி வரையிலான சம்பளத்தோடு இணைந்த ஊதிய உயர்வைப் பெறுவர்.

தேசியச் சம்பள மன்றத்தின் பரிந்துரைகள், பொதுத் துறைத் தொழிற் சங்கங்களின் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டு நடுப்பகுதி போனஸ் குறித்து முடிவு செய்யப்பட்டது.

குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படுவதை அரசாங்கத்தின் முயற்சிகள் எடுத்துக்காட்டுவதாக பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் பொருளியல் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 1.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

இந்த ஆண்டு முழுமைக்குமான பொருளியல் வளர்ச்சி, ஒன்றரை விழுக்காடு முதல் இரண்டரை விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று முன்னோடி மதிப்பீடுகள் காட்டுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்