Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூன் லே பிளேஸ் உணவங்காடி நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்

பூன் லே பிளேஸ் உணவங்காடி நிலையத்தில் (Boon Lay Place Food Village), 7 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அது 2 வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

வாசிப்புநேரம் -
பூன் லே பிளேஸ் உணவங்காடி நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்

(கோப்புப்படம்: Google Maps)

பூன் லே பிளேஸ் உணவங்காடி நிலையத்தில் (Boon Lay Place Food Village), 7 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அது 2 வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

221B பூன் லே பிளேஸில் உள்ள உணவங்காடி நிலையத்தில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இன்று முதல், அடுத்த மாதம் 6ஆம் தேதிவரை அது மூடப்படும்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்கு வேலை செய்தவர்கள் அல்லது அங்கு சென்று வந்தவர்கள்.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்தில் ஏற்பட்ட கிருமிப்பரவல் பற்றி சுகாதார அமைச்சு மேற்கொண்ட விசாரணையில், புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பற்றி தெரியவந்தது.

பூன் லே பிளேஸ் உணவங்காடி நிலையத்துக்கு, இம்மாதம் 8ஆம் தேதியில் இருந்து, 22-ஆம் தேதி வரை சென்றிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவசக் கிருமித்தொற்றுப் பரிசோதனை வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்