Images
  • PIC
    படம்: Kesh Kaajhuab Kanth/Facebook 

பூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை

மதுபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல்
பூன் லே வட்டாரத்தில் வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார்சைக்கிள்களையும் ஒரு காரையும் எரித்த ஆடவருக்கு 2.5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

33 வயது லோ சியென் அய்க் (Loh Hsien Aik) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

புளோக் 221 பூன் லே பிளேஸில் நடந்த அந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

ஆடவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஒன்றுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொன்று கருத்தில் கொள்ளப்பட்டது.

ஆடவர் செய்த அந்தச் செயலால் 103,244 வெள்ளி பொருள் சேதம் ஏற்பட்டதாகவும், காப்புறுதி மூலம் 34,237 வெள்ளி மட்டுந்தான் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெருப்பை வைத்து தகாத செயல்களைச் செய்த குற்றத்திற்காக லோவுக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
 

Top