Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அக்டோபர் 4 முதல், 50-59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் booster தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கப்படுவர்

 அக்டோபர் 4 முதல், 50-59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் booster தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கப்படுவர்

வாசிப்புநேரம் -
அக்டோபர் 4 முதல், 50-59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் booster தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கப்படுவர்

(படம்: AFP)

சிங்கப்பூரில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 50 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் booster தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டங்கட்டமாக அழைக்கப்படுவர்.

இன்று நடந்த அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுக் கூட்டத்தில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரில் இம்மாதம் 15 ஆம் தேதி முதல்
booster தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது.

மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கும், 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள மூத்தோருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது.

தற்போது சுமார் 91,500 பேர் booster தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதங்களுக்கு பிறகு booster தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று COVID-19 நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

Booster தடுப்பூசி போட்டுக்கொள்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Booster ஊசி போடத் தகுதி பெற்றவர்களுக்கு, ஒரு தனிப்பட்ட இணைய முகவரியுடன் குறுந்தகவல் அனுப்பப்படும்.

அதைக் கொண்டு அவர்கள் முன்பதிவுகளைச் செய்துகொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்