Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எந்த நாடுகள், எந்த இடங்கள்.....என்னென்ன கட்டுப்பாடுகள்?

சிங்கப்பூரில் அண்மைக்காலமாக, நாடுகள், நகரங்கள் கிருமிப்பரவல் அபாயத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
எந்த நாடுகள், எந்த இடங்கள்.....என்னென்ன கட்டுப்பாடுகள்?

கோப்புப்படம்: Reuters

சிங்கப்பூரில் அண்மைக்காலமாக, நாடுகள், நகரங்கள் கிருமிப்பரவல் அபாயத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் கடந்த 14 நாள்களில் பயணம் மேற்கொண்ட இடங்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளும் வேறுபடுகின்றன.

தற்போது, எந்தெந்தப் பிரிவுகளில் நாடுகள், நகரங்கள் உள்ளன? கட்டுப்பாடுகள் என்னென்ன? ஒரு பார்வை:

-ஹாங்காங்
- மக்காவ்
- சீனத் தலைநிலம்
- தைவான்

*சிங்கப்பூருக்கு வந்தவுடன் பயணிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

முடிவு தெரியும்வரை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இரண்டாம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு

- அமெரிக்கா
- பிரிட்டன்
- ஆஸ்திரேலியா
- ஜப்பான்
- நியூசிலந்து
-ஜெர்மனி
-டென்மார்க்
-இத்தாலி

உள்ளிட்ட நாடுகள்

*சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் 48 மணி நேரத்துக்குள் PCR பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

* 7 நாள் வீட்டில் தங்கும் உத்தரவை, வீட்டிலேயே நிறைவேற்றலாம்.

*7-ஆவது நாள் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

- மலேசியா
- இந்தோனேசியா
- கம்போடியா
- இஸ்ரேல்
- கத்தார்
- தென்னாப்பிரிக்கா
- ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
- வியட்நாம்

உள்ளிட்டவை

*சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் 48 மணி நேரத்துக்குள் PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
மலேசியாவிலிருந்து இணைப்புப் பாலம் வழி வருவோருக்குப் பொருந்தாது.

* 10 நாள் வீட்டில் தங்கும் உத்தரவை, வீட்டிலேயே நிறைவேற்றலாம்

*10-ஆவது நாள் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

-இந்தியா
- பங்களாதேஷ்
- நேப்பாளம்
- பாகிஸ்தான்
- இலங்கை
- மியன்மார்

உள்ளிட்ட நாடுகள்

*சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் 48 மணி நேரத்துக்குள் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

* நிர்ணயிக்கப்பட்ட வசதியில் 10 நாள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

*10-ஆவது நாள் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இருப்பினும், சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தின்கீழ், 11 நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், புருணை, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அதன் கீழ் வரும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்