Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் சிங்கப்பூர் வந்தவுடன் COVID-19 PCR பரிசோதனை

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் உட்பட வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் இனி, சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் கிருமித்தொற்றுக்கான PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் உட்பட வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் இனி, சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் கிருமித்தொற்றுக்கான PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

அது குறித்து சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய நடைமுறை இம்மாதம் 25-ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.

இந்நிலையில், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுக்கான நடைமுறைகளும் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று அமைச்சு கூறியது. பயணிகள் தனிமையில் இருந்த பிறகு, மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பும் சிங்கப்பூரர்களும் நிரந்திரவாசிகளும், கூடுதலாக 7 நாள்களுக்குச் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அமைச்சு கூறியது.

அது வரும் 19ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிறைவேற்றும் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவையும் தாண்டி, அது நடைமுறைப்படுத்தப்படும்.

14 நாட்களுக்குப் பிறகு ஒருமுறையும், மேலும் 7 நாட்களுக்குப் பிறகு மற்றொரு முறையும் அவர்கள் சோதிக்கப்படுவர்.

உலகெங்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பதை அடுத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படுவதாக அமைச்சு சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்