Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூடிகளைக் கொண்டு இவ்வளவு பெரிய கலைப்படைப்பா!

சிங்கப்பூரில் போத்தல் மூடிகளால் உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய கலைப்படைப்பைச் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
மூடிகளைக் கொண்டு இவ்வளவு பெரிய கலைப்படைப்பா!

படம்: Science Centre Singapore

சிங்கப்பூரில் போத்தல் மூடிகளால் உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய கலைப்படைப்பைச் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ளது.

அறிவியல் நிலையத்தின் UNTAME 2021 என்ற கற்றல் விழாவின் ஓர் அங்கமாக அந்த அதிசயப் படைப்பு இன்று வெளியீடு கண்டது.

படைப்பின் பெயர்... CAPtivate - அதன் பொருள்: வசீகரம். அதே வேளையில், அந்தச் சொல் CAP (மூடி) என்ற சொல்லையும் உள்ளடக்கியுள்ளது.

உள்ளுர்க் கலைஞர் எட்மண்ட் சென் (Edmund Chen) என்பவரால் வடிவமைக்கப்பட்ட அந்தச் படைப்பின் நீளம் 14 மீட்டர்! உயரம் 2 மீட்டர்.

அறிவியல் நிலையம், நீடித்த நிலைத்தன்மைமிக்க எதிர்காலத்தை உருவாக்க முனைகிறது.

அந்த நோக்கத்தின் சின்னமாக மூடிகளால் வடிவமைக்கப்பட்ட இந்தப் படைப்பு அமைகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்