Images
  • Boy's Home Riot
    (படம்: TODAY)

சீர்திருத்த இல்லத்தில் கலவரம் செய்த இளையர்கள் இருவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

சிங்கப்பூர் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் சம்பந்தப்பட்ட 14 இளையர்களில், இருவர் ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நடைபாதையில் சவுக்காரம் தெளித்தது, தீயணைப்பான் கொண்டு பாதுகாப்புப் பெட்டியை உடைத்தது, துணைக் காவல்துறை அதிகாரியை மட்டைகளால் தாக்கியது ஆகியவை அந்த 14 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள்.

சம்பவத்தில் இல்லத்தில் வேலை செய்த மூன்று ஊழியர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டன.

காவல்துறை அதிகாரியின் கண் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கலவரத்தில் இல்லத்திற்கு சுமார் 11,000 வெள்ளி சேதம் ஏற்பட்டது.  

Top