Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கண்நோய்களுக்கும், மூளைச் செயல்திறன் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது : ஆய்வுத் தகவல்

கண்நோய்களுக்கும், மூளையின் செயல்திறன் குறைபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

கண்நோய்களுக்கும், மூளையின் செயல்திறன் குறைபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரையும், அமெரிக்காவையும் சேர்ந்த ஆய்வாளர்களின் தலைமையில் அனைத்துலகக் குழு அந்த ஆய்வை மேற்கொண்டது.

Glaucoma எனப்படும் கண்-அழுத்த நோய்க்கும், Alzheimer, முதுமை மறதி நோய் போன்ற மூளைச் செயல்திறன் தொடர்பான நோய்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

பெரும்பாலும் ஆப்பிரிக்க வம்சாவளியினரிடம் அத்தகைய தொடர்பு காணப்படுகிறது.

Glaucoma வெறும் கண் சம்பந்தப்பட்ட நோயாக இருக்கமுடியாது என்று இதுவரை நிலவிய சந்தேகத்தை அண்மை ஆய்வு முடிவுகள் உறுதிசெய்துள்ளன.

Glaucoma பற்றிய புதிய ஆய்வுக் கண்ணோட்டத்துக்கும், அதற்கான சிகிச்சை தொடர்பில் புத்தாக்க வழிமுறைகளை ஆய்வுசெய்யவும் அவை வித்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் A*STAR ஆய்வு நிறுவனம், சிங்கப்பூர் மரபணு நிலையம், சிங்கப்பூர்க் கண் மருத்துவ ஆய்வு நிலையம், சிங்கப்பூர் தேசியக் கண் சிகிச்சை நிலையம், Duke-NUS மருத்துவக் கல்லூரி, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் 2 உள்ளிட்டவை அந்த ஆய்வில் பங்கேற்றன.

அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் சஞ்சிகையில் ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்