Images
  • food junction
    (படம்: Google Maps)

Food Junction உணவகங்களை வாங்கும் BreadTalk - போட்டித்தன்மைக்கு எதிரானதா?

BreadTalk நிறுவனம் Food Junction நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துகளை சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் வரவேற்கிறது.

செப்டம்பர் 24க்குள் கருத்துகளைப் பதிவுசெய்யும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது.

BreadTalk நிறுவனம் Food Republic, Food Opera என்ற பெயர்களில் உணவுக்கடைத் தொகுதிகளை சிங்கப்பூர், மலேசியா, சீனா, தைவான், கம்போடியா, தாய்லந்து ஆகியவற்றில் நடத்துகிறது.

கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் cccs_feedback@cccs.gov.sg என்ற மின்னஞ்சல் வழி பதிவுசெய்யலாம். மேல்விவரங்களை சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.   

Top