Images
  • handcuff
    கோப்புப்படம்: Jeremy Long

கடை புகுந்து திருட்டு - 10 மணி நேரத்துக்குள் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்

ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 72இல் (Jurong West Street 72) உள்ள கடைக்குள் புகுந்து மதுபானம் திருடிய சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் திருட்டுச் சம்பவம் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

விசாரணை, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆகியவற்றின் மூலம் ஜூரோங் காவல்துறைப் பிரிவினர் பத்தே மணி நேரத்துக்குள் சந்தேக நபரை அடையாளங்கண்டு கைது செய்தனர்.

சந்தேக நபர் திருட்டுச் சம்பவத்தின்போது அணிந்திருந்த உடைகள், காலணிகள் ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

விசாரணை தொடர்கிறது. 

Top