Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

BTO வீடுகளைப் புதுப்பிப்பதில் மேலும் 2 மாதங்கள் வரை தாமதம் ஏற்படலாம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் BTO  எனப்படும் தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் வீடுகளைப் புதுப்பிப்பதில், வீட்டு உரிமையாளர்கள் மேலும் 2 மாதங்கள் வரை கூடுதல் தாமதத்தை  எதிர்நோக்கக்கூடும் என்று புதுப்பிப்பு நிறுவனங்கள்  தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் BTO எனப்படும் தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் வீடுகளைப் புதுப்பிப்பதில், வீட்டு உரிமையாளர்கள் மேலும் 2 மாதங்கள் வரை கூடுதல் தாமதத்தை எதிர்நோக்கக்கூடும் என்று புதுப்பிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கான செலவுகளும் அதிகரிக்கலாம் என்று அவை குறிப்பிட்டன.

கோவிட்-19 கிருமிப்பரவல், தேவைக்கு ஏற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் உரிமையாளர்களின் கைக்கு வருவதைத் தாமதப்படுத்தியுள்ளது.

அதன் தாக்கம் புதுப்பிப்பு நிறுவனங்களின் திட்டங்களையும் பாதித்துள்ளது.

அதனால் எதிர்வரும் மாதங்களில் சில வேலைகள் பின்தங்கிப் போகும் என்று நிறுவனங்கள் கூறியுள்ளன.

புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பெரும்பாலான ஊழியர்கள் மலேசியாவிலிருந்து வருகின்றனர்.

இருப்பினும் கடந்தாண்டு எல்லைகள் மூடப்பட்டப்போது 20 முதல் 30 விழுக்காட்டு ஊழியர்கள் மட்டுமே சிங்கப்பூரில் தங்க முடிவெடுத்ததாக நிறுவனங்கள் கூறின.

புதிய ஊழியர்களைப் பணியமர்த்தினால், அவர்களைத் தனிமைப்படுத்தவும், தங்கவைக்கவும் கூடுதல் செலவாகும் என்றும் நிறுவனங்கள் குறிப்பிட்டன.

இதுதவிர மற்ற சிக்கல்களும் உள்ளன.

பெரும்பாலான ஊழியர்கள் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர்.

புதுப்பிப்புப் பணிகளின் போது எழக்கூடிய சத்தம் குறித்து புகார்கள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனால் வேலை நேரத்தை அவை குறைக்க வேண்டிவரலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்