Images
  • grocery
    (கோப்புப் படம்: Facebook/SPF)

வரவுசெலவுத் திட்ட மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுத் திருட்டு, பொய்ப்புகார் குறித்து விசாரணை

வரவுசெலவுத் திட்ட மளிகைப்பொருள் பற்றுச்சீட்டைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 63 வயது ஆடவர் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவருடைய பற்றுச்சீட்டுகளும் வீட்டில் அவருடன் தங்கியிருப்பவரின் பற்றுச்சீட்டுகளும் திருடப்பட்டதாக அவர் பொய்ப் புகார் அளித்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருவரின் பற்றுச்சீட்டுகளும் அந்த ஆடவரின் அஞ்சல்பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாக முன்னோடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் தம்முடைய பற்றுச்சீட்டையும் உடன் தங்கியிருப்பவரின் பற்றுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு, சந்தேகம் வராமலிருக்க, அவை களவுபோனதாகக் காவல்துறையிடம் புகார் கொடுத்தார் என்று நம்பப்படுகிறது.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

திருடியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ, அபராதமோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அரசாங்க ஊழியரிடம் பொய்த்தகவல் அளித்ததற்கு
2 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையோ, அபராதமோ, இரண்டுமோ விதிக்கப்படலாம். 

Top