Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டம்... முக்கிய அறிவிப்புகள் ஒரு பார்வையில்...

கோவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்புகளைச் சிங்கப்பூர் எதிர்கொள்ள, மீள்திறனுக்குரிய வரவுசெலவுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டம்... முக்கிய அறிவிப்புகள் ஒரு பார்வையில்...

கோப்புப்படம்

கோவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்புகளைச் சிங்கப்பூர் எதிர்கொள்ள, மீட்சிக்கான வரவுசெலவுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கக், கூடுதலாக 48 பில்லியன் வெள்ளியைச் அரசாங்கம் செலவிடவிருக்கிறது.

அவை..ஒரே பார்வையில்...

குடும்பங்களுக்கு...

  • பராமரிப்பு, ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வழங்குதொகை 3 மடங்காகி, $300 முதல் $900 வரை உயரும்.
  • இளம் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட $100 வழங்குதொகை $300க்கு அதிகரிக்கப்படும்.
  • குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு உணவு, மளிகைப் பொருள்கள் வாங்க $300 பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
  • அடுத்த மாதத்திலிருந்து 31 மார்ச் 2021 வரை அனைத்து அரசாங்கச் சேவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படமாட்டா.

ஊழியர்களுக்கு...

  • வேலைநலன் சிறப்புத் தொகைத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு $3,000 கிடைக்கும்.
  • அடுத்த ஆண்டு 10,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும். பொதுச் சேவைத் துறை அவற்றை முன்னெடுத்துச் செல்லும்.
  • தகுதிபெறும் சுயதொழில் செய்வோருக்கு 9 மாதங்களுக்கு மாதந்தோறும் $1,000 வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கு...

  • வேலை ஆதரவுத் திட்டத்திற்குத் தகுதிபெறும் சம்பள வரம்பு $3,600இலிருந்து $4,600க்கு உயர்த்தப்படுகிறது. சம்பளத்தில் 25% முதல் 75% வரை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
  • விமானத்துறை, பயணத்துறை, ஹோட்டல் துறை ஊழியர்களின் சம்பளத்தில் முதல் $4600இல் 75%ஐ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
  • உணவு-பானத் துறை ஊழியர்களின் சம்பளத்தில் முதல் $4600இல் 50%ஐ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
  • COVID-19 கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட வர்த்தகக் கட்டட உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தத் தேவையில்லை.

அரசாங்க ரீதியாக...

  • அரசாங்கத்தில் அரசியல் பதவியிலிருப்போர் பதவியில் இருப்பவர்கள் மொத்தம் மூன்று மாதம் சம்பளம் பெற மாட்டார்கள்.
  • புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை $ 39.2 பில்லியனுக்கு உயரும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்