Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2019 வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும்

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியாட் நாடாளுமன்றத்தில் அடுத்த திங்கட்கிழமை மதியம் 3.30 மணிக்குத் தாக்கல் செய்யவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
2019 வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும்

(படம்: Hani Amin/ CNA)

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியெட் நாடாளுமன்றத்தில் அடுத்த திங்கட்கிழமை மதியம் 3.30 மணிக்குத் தாக்கல் செய்யவிருக்கிறார்.

நிதி அமைச்சு அதனைத் தெரிவித்தது.

வரவு செலவுத் திட்ட உரை பல்வேறு தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

வரவு செலவுத் திட்ட இணையப்பக்கம் அவற்றில் ஒன்று.

Channel NewsAsia ஒளிவழியிலும், அதன் இணையத்தளத்திலும் அது நேரடியாக ஒளிபரப்பாகும்.

93.8Now வானொலியில் நேரடியாக உரையைக் கேட்கலாம்.

மீடியாகார்ப்பின் Toggle இணையத்தளத்திலும், வரவு செலவுத் திட்ட உரையின் நேரடி ஒளிபரப்பு இடம்பெறும்.

"செய்தி" இணையத்தளம், அதன் Facebook, Twitter பக்கங்களில் தகவல்களை உடனுக்குடன் பெறலாம். 

Channel NewsAsia-வின் இணையத்தளத்திலும், அதன் Facebook, Twitter தளங்களிலும் வரவு செலவுத் திட்டம் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

நேரடி வலைப்பதிவு ஒன்றும் இடம்பெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் நேரடி சைகை மொழிபெயர்ப்பு, வரவுசெலவுத் திட்ட இணையத்தளத்தில் இடம்பெறும்.

சிங்கப்பூர் செவிப்புலன் குன்றியோருக்கான சங்கத்துடன் இணைந்து, நிதி அமைச்சு அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்கள், நிதி அமைச்சின் Facebook, Twitter பக்கங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்நிலையில், அரசாங்கத்தின் கருத்துத் திரட்டு அமைப்பான REACH, வரவு செலவுத் திட்ட உரைக்குப் பிந்திய கலந்துரையாடலை வரும் 21ஆம் தேதி நடத்தவிருக்கிறது.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திரானி ராஜா, REACH அமைப்பின் தலைவர் சாம் டான் இருவரும் அதனை வழிநடத்துவர்.

வரவு செலவுத் திட்டம் பற்றிய கருத்துகளையும் பரிந்துரைகளையும் சிங்கப்பூரர்கள், REACH-இன் Pre-Budget Listening Points எனும் கருத்துத் திரட்டு முகப்புகளுக்கு நேரடியாகச் சென்று பகிர்ந்துகொள்ளலாம்.

இம்மாதம் 20ஆம் தேதிக்கும், அடுத்த மாதம் மூன்றாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு இடங்களில் அந்தக் கருத்துத் திரட்டு முகப்புகள் அமைக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்