Images
  • Bukit Batok (1)
    கோப்புப்படம்: SCDF

புக்கிட் பாத்தோக் பேருந்து விபத்தும் COVID-19 நிலவரமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கின்றன

புக்கிட் பாத்தோக் பேருந்து விபத்து, COVID-19 நிலவரம் ஆகியவை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவிருக்கிறது.

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது.

அப்போது அமைச்சர்களின் அமைச்சர்நிலை அறிக்கைகளும் வெளியிடப்படும்.

COVID-19 நோய்த்தொற்றுக்காக அமைக்கப்பட்ட அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவை வழிநடத்தும்
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong), வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் ஆகியோர் கிருமித்தொற்று நிலவரம் பற்றிப் பேசுவார்கள்.

அரசாங்கம் அண்மையில் அறிவித்த COVID-19 ஆதரவுத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மற்ற திட்டங்கள் குறித்துத் தங்கள் கேள்விகளை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டனர்.
 

Top