Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புளோக் 115 புக்கிட் மேரா வியூ சந்தை உணவங்காடி நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

புக்கிட் மேரா வியூ புளோக் 115 இல் உள்ள சந்தை, உணவங்காடி நிலையம் இன்று (ஜூன் 13) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) வரை சுத்திகரிப்புப் பணிகளுக்காக மூடப்படும்.

வாசிப்புநேரம் -
புளோக் 115 புக்கிட் மேரா வியூ சந்தை உணவங்காடி நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

(படம்: Google Maps)

புக்கிட் மேரா வியூ புளோக் 115 இல் உள்ள சந்தை, உணவங்காடி நிலையம் இன்று (ஜூன் 13) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) வரை சுத்திகரிப்புப் பணிகளுக்காக மூடப்படும்.

தஞ்சோங் பகார் நகரமன்றம் அதுபற்றி தனது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மூன்று நாளுக்கு முன்னர்,
அங்குள்ள கடைக்காரருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சுத்தப்படுத்தவும், கிருமி நீக்கம் செய்யவும் அந்த வளாகம் மூடப்படுகிறது.

கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வளாகத்தை மீண்டும் திறப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்