Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் தீமாவில் விரிவுபடுத்தப்பட்ட மடைமாற்றுக் கால்வாயின் மேம்பாடுப் பணிகள் நிறைவு

புக்கிட் தீமாவில் விரிவுபடுத்தப்பட்ட முதல் மடைமாற்றுக் கால்வாய்க்கான மேம்பாடுப் பணிகள் முடிவடைந்துள்ளன.

வாசிப்புநேரம் -
புக்கிட் தீமாவில் விரிவுபடுத்தப்பட்ட மடைமாற்றுக் கால்வாயின் மேம்பாடுப் பணிகள் நிறைவு

படம்: PUB

புக்கிட் தீமாவில் விரிவுபடுத்தப்பட்ட முதல் மடைமாற்றுக் கால்வாய்க்கான மேம்பாடுப் பணிகள் முடிவடைந்துள்ளன.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட கால்வாய் மேம்பாட்டுத் திட்டங்களில் புக்கிட் தீமா மடைமாற்றுக் கால்வாய்க்கே ஆக அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளது.

அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் அவ்வப்போது ஏற்படும் திடீர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த விரிவுப்படுத்தப்பட்ட கால்வாய் உதவும்.

கால்வாய் குறுகலாய் இருந்ததன் காரணமாக, குறிப்பிட்ட இந்த வட்டாரம் திடீர் வெள்ளத்தால் அவ்வப்போது பாதிக்கப்பட்டது.

தற்போது மறுசீரமைக்கப்பட்ட 3.2 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயால் 30 விழுக்காடு கூடுதலான மழைநீரை ஏற்றுக் கொள்ள முடியும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

அதிக அளவில் நீர் வடிவதற்காகக் கால்வாயின் சில பகுதிகள் ஏறக்குறைய மூன்று மடங்கு அகலப்படுத்தப்பட்டன.

புக்கிட் தீமா சாலையிலிருந்து கிளமெண்டி சாலை வரை நீடிக்கும் கால்வாய் சுமார் 1,000 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் பெய்யும் மழை நீர் வடிவதற்குச் சேவையாற்றும்.

2012ஆம் ஆண்டு தொடங்கிய மேம்பாட்டுப் பணிகளை முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்தன.

சுமார் 300 மில்லியன் வெள்ளி செலவில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பருவநிலை மாறிவரும் சூழலில் இத்தகைய கால்வாய்ப் பணிகள், முக்கியமான, அவசியமான முதலீடு என சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் 400 மில்லியன் வெள்ளி கூடுதலாகச் செலவிடப்படும்.

தற்போது 60 இடங்களில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்