Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விபத்துகள் காரணமாக அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் கூடுதல் சிவப்பு-மஞ்சள்-பச்சை அம்பு போக்குவரத்து விளக்குகள்

அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் பல்வேறு சாலைச் சந்திப்புகளில் சிவப்பு-மஞ்சள்-பச்சை அம்பு போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
விபத்துகள் காரணமாக அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் கூடுதல் சிவப்பு-மஞ்சள்-பச்சை அம்பு போக்குவரத்து விளக்குகள்

(படம்: CNA)

அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் பல்வேறு சாலைச் சந்திப்புகளில் சிவப்பு-மஞ்சள்-பச்சை அம்பு போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அங்கு நிகழ்ந்த பல விபத்துகளைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அந்தச் சாலையில் 15 விபத்துகள் நடந்தன. அவற்றில் 8 விபத்துகள் வாகனங்கள் வலது பக்கமாக வளையும்போது அல்லது U வளைவை மேற்கொள்ளும் போது ஏற்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாம் (Rahayu Mahzam) கேட்டிருந்த கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அமைச்சர் அதனைத் தெரிவித்தார்.

அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அளவுக்கு மீறிய வேகத்துடன் ஓட்டுநர்கள் வாகனங்களைச் செலுத்துவதாக 2017க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் பொதுமக்களிடமிருந்து போக்குவரத்துக் காவல்துறைக்கு 14 அழைப்புகளும் கடிதங்களும் வந்ததாகத் திரு. சண்முகம் கூறினார்.

அதனைத் தொடர்ந்து வேகக் கட்டுப்பாடு குறித்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்துக் காவல்துறை அவ்வப்போது சோதனைகளை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

தேவைப்பட்டால் அங்கு கேமராக்களும் பொருத்தப்படும் என்று அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்