Images
  • yishu attacker

பேருந்து ஓட்டுநர்கள் இருவரைத் தாக்கிய ஆடவருக்கு ஒன்பது வாரச் சிறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

SMRT பேருந்து ஓட்டுநர்கள் இருவரைத் தாக்கிய 27 வயது ஆடவருக்கு 9 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவரைத் தாக்கிய குற்றத்துக்காக ஏற்கனவே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

பிப்ரவரி 8 ஆம் தேதி SMRT பேருந்தில் பயணம் செய்தார் நூர்ஹிதாயத் ஸலாமத்.

அப்போது தாம் செல்ல வேண்டிய இடத்துக்குரிய பயணக் கட்டணத்துக்குக் குறைவான தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

எஞ்சிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட பேருந்து ஓட்டுநரின் முகத்தில் குத்தினார் நூர்ஹிதாயத்.

மறுநாளும் அதே பேருந்துத் தடத்தில், அதேபோலக் குறைவான கட்டணம் செலுத்தி யீஷூனுக்குச் செல்ல முயன்றார்.

உரிய கட்டணம் செலுத்த வலியுறுத்தினார் பேருந்து ஒட்டுநர்.

அதனால் ஆத்திரமடைந்த நூர் ஹிதாயத், ஓட்டுநரை மோசமாகத் திட்டித் தாக்கினார்.

ஆத்திரத்திலும், மனவுளைச்சலிலும் தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக நூர் ஹிதாயத் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  

Top