Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப் பரவல் சூழலில் வர்த்தகங்கள் மீண்டுவருவதற்கு அரசாங்கத்தின் விரைவான செயல்பாடுகள் உதவும்: அமைச்சர் சான்

கிருமிப் பரவல் சூழலில் வர்த்தகங்கள் வளர்ச்சிகாணவும், புத்தாக்க முறையில், வலுவோடு மீண்டுவருவதற்கும், அரசாங்கத்தின் விரைவான செயல்பாடுகள் உதவும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
கிருமிப் பரவல் சூழலில் வர்த்தகங்கள் மீண்டுவருவதற்கு அரசாங்கத்தின் விரைவான செயல்பாடுகள் உதவும்: அமைச்சர் சான்

கோப்புப்படம்: Gaya Chandramohan

கிருமிப் பரவல் சூழலில் வர்த்தகங்கள் வளர்ச்சிகாணவும், புத்தாக்க முறையில், வலுவோடு மீண்டுவருவதற்கும், அரசாங்கத்தின் விரைவான செயல்பாடுகள் உதவும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

விதிமுறைகளை உடனடியாக மறுஆய்வு செய்தல் அல்லது புதிய விதிகளை அறிவித்தல், அரசாங்கத்துக்கும், தனியார் துறைக்கும் இடையிலான ஆழமான பங்காளித்துவம் ஆகியவை அதனை மேம்படுத்தும் என்றார் அவர்.

தொழில்முனைப்பு ஆதரவுக் குழுவின் வருடாந்தர விருது நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார்.

சிங்கப்பூரின் போட்டித்தன்மையை வலுப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

உலக அரங்கில் சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் கிடைப்பதை அது உறுதிசெய்யும்.

சிங்கப்பூரின் புத்தாக்க நிறுவனங்கள் தொழில்முனைப்பு ஆதரவுக் குழுவின் துணையுடன், நேரத்தையும், பணத்தையும் சேமிக்க முடிவதாகக் கூறுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்