Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாடகை வீட்டிலிருந்த 3,500 பேர் சொந்த வீட்டுக்கு மாறியுள்ளனர்

வாடகை வீட்டில் வசித்த சுமார் 3,500 பேர், கடந்த 6 ஆண்டுகளில் வீட்டு உரிமையாளர்களாகி இருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

வாடகை வீட்டில் வசித்த சுமார் 3,500 பேர், கடந்த 6 ஆண்டுகளில் வீட்டு உரிமையாளர்களாகி இருக்கின்றனர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டம், எஞ்சிய வீட்டு விற்பனைத் திட்டம் ஆகியவற்றின் கீழ், அவர்கள் வீடுகளை வாங்கியிருக்கின்றனர்.

முன்பு வீடு வாங்க வசதியின்றி இருந்த அந்தப் பிரிவினரின் நிதி நிலைமை இப்போது மேம்பட்டிருப்பதாகக் கழகம் கூறியது.

கழகம் வழங்கும் பல்வேறு வீட்டு மானியங்கள், சலுகைத் திட்டங்கள் மூலம் அவர்கள் பயனடைந்துள்ளனர்.

மறுவிற்பனை வீடு வாங்குவோருக்கு அதிகபட்சம், 110,000 வெள்ளி வரை மானியம் வழங்கப்படுகிறது.

வாடகை வீட்டிலிருந்து முதல்முறையாகப் புதிய ஈரறை, அல்லது மூவறை வீட்டுக்கு மாறுவோர், முன்னுரிமைத் திட்டம் ஒன்றுக்கும் தகுதி பெறுகின்றனர்.

புதிய வீடுகளுக்கான விற்பனைத் திட்டத்தில் இடம்பெறும் வீடுகளில், 10 விழுக்காடு அவர்களுக்காக ஒதுக்கப்படும்.

வாடகை வீட்டில் வசிக்கும் சுமார் 600 பேர் ஆண்டுதோறும் சொந்த வீடு வாங்குவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்