Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமைச்சரவை மாற்றம், வழக்கத்தைவிட விரிவானது - பிரதமர் லீ

இம்முறை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம், வழக்கத்தைவிட விரிவானது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

இம்முறை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம், வழக்கத்தைவிட விரிவானது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

பிரதமர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வாறு கூறினார்.

இளைய அமைச்சர்களின் பொறுப்புகளை மேலும் விரிவாக்கத் தாம் முடிவெடுத்ததாய்த் திரு. லீ தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலோருக்கு 2 அமைச்சுகளும், கூடுதல் பொறுப்புகளும் வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூரை நிர்வகிக்க, இளைய அமைச்சர்கள் தொடர்ந்து கூடுதல் பொறுப்புகளை ஏற்பர் என்றார் திரு.லீ.

அமைச்சரவை மாற்றம் நடப்புக்கு வந்தபிறகு, மூன்றில்-இரண்டு பங்கு அமைச்சுகளின் தலைமைப் பொறுப்பில் இளைய அமைச்சர்கள் இருப்பர்.

அடுத்த சில ஆண்டில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்