Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமைச்சரவை மாற்றங்கள் அறிவிப்பு

பிரதமர் லீ சியென் லூங், அமைச்சரவை மாற்றங்களை அறிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
அமைச்சரவை மாற்றங்கள் அறிவிப்பு

(படம்: MCI)

பிரதமர் லீ சியென் லூங், அமைச்சரவை மாற்றங்களை அறிவித்திருக்கிறார்.

மாற்றங்கள் அடுத்த மாதம் நடப்புக்கு வரும்.

  • புதிய தொடர்பு தகவல் அமைச்சராக திரு எஸ். ஈஸ்வரன் பொறுப்பேற்பார். வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் அவர் பணியாற்றுவார்.
  • திரு. சான் சுன் சிங், வர்த்தக, தொழில் அமைச்சராகப் பதவியேற்பார். பிரதமர் அலுவலக அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவார்.
  • திரு. இங் சீ மெங், பிரதமர் அலுவலக அமைச்சராகப் பொறுப்பேற்பார். பள்ளிகளுக்கான கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்தும், போக்குவரத்துக்கான இரண்டாம் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகுவார்.
  • திரு. ஓங் யீ காங், கல்வி அமைச்சின் முழுப் பொறுப்பையும் ஏற்பார். தற்காப்பு அமைச்சின் இரண்டாம் அமைச்சர் பொறுப்பை அவர் கைவிடுவார்.
  • திருமதி ஜோசஃபின் தியோ, மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்பார். உள்துறைக்கான இரண்டாம் அமைச்சராக அவர் தொடர்ந்து பதவி வகிப்பார். பிரதமர் அலுவலக அமைச்சர் பொறுப்பை அவர் கைவிடுவார்.
  • குமாரி இந்திராணி ராஜா, பிரதமர் அலுவலக அமைச்சராகப் பதவி உயர்வு பெறுகிறார். நிதியமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றில் இரண்டாம் அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகிக்கவிருக்கிறார். இடைநிலை ஏற்பாடாக, சட்ட அமைச்சுக்கான இரண்டாம் அமைச்சராகவும் குமாரி இந்திராணி ராஜா, ஜூன் மாத இறுதிவரை செயல்படுவார் 



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்