Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கம்பிவடக் கண்டுகளில் தீர்வை செலுத்தப்படாத 3,400 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல்

கம்பிவடக் கண்டுகளில் (cable spools) தீர்வை செலுத்தப்படாத சுமார் 3,400 சிகரெட் பொட்டலங்களைப் பறிமுதல் செய்த சந்தேகத்தில் மூவரைச் சிங்கப்பூர்ச் சுங்கத் துறை கைதுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -


கம்பிவடக் கண்டுகளில் (cable spools) தீர்வை செலுத்தப்படாத சுமார் 3,400 சிகரெட் பொட்டலங்களைப் பறிமுதல் செய்த சந்தேகத்தில் மூவரைச் சிங்கப்பூர்ச் சுங்கத் துறை கைதுசெய்துள்ளது.

கம்பாஸ் கிரசென்ட்டில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் ஆடவர்கள் கம்பிவடக் கண்டிலிருந்து சிகரெட் பொட்டலங்களை எடுப்பதைப் பார்த்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பொட்டலங்களின் மொத்த பொருள் சேவை வரி, தீர்வை மதிப்பு சுமார் 313,000 வெள்ளி.

மூன்று பேரும் சனிக்கிழமை ( 7 செப்டம்பர்) குற்றஞ்சாட்டப்பட்டனர்.

தீர்வை செலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, விற்பது, விநியோகம் செய்வது, பதுக்கி வைத்திருப்பது ஆகியவை கடுமையான குற்றங்கள் என்று சுங்கத் துறை கூறியது.

குற்றம் நிரூபிக்கப்படால் அதிகபட்சமாக தீர்வை செலுத்தப்படாத பொருள்களின் மதிப்பைப்போல் 40 மடங்கு வரை அபராதமும் ஆறாண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்