Images
  • cake mix recall
    (படம்:AVA)

Duncan Hines கேக் கலவை மீட்டுக்கொள்ளப்பட்டது

Duncan Hines' Signature Confetti கேக் கலவையில் சல்மோனெல்லா (Salmonella) கிருமி கலந்திருப்பதாக நம்பப்படுவதால், அவை சிங்கப்பூர்க் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் நேற்று (நவம்பர் 8) இதனைத் தெரிவித்தது.

அமெரிக்க நிறுவனமான Duncan Hines'இன் 4 கேக் கலவைகளை மீட்டுக்கொள்வதற்கு அமெரிக்க உணவு ஆணையம் (FDA) ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அந்தக் கலவையின் மாதிரியைச் சோதனை செய்ததில் சல்மோனெல்லா கிருமி இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அது கூறியது.

அமெரிக்காவில் தற்போது பரவிவரும் சல்மோனெல்லா கிருமிச் சம்பவங்களுக்கும் கேக் கலவைக்கும் தொடர்பு இருக்கலாம் என FDA கூறியது.

அது நடத்திய சோதனையில் Duncan Hines'இன் கேக் கலவை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டது உறுதியாகியிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறக்குமதியாளர் அந்தக் கலவையைத் தானாகவே மீட்டுக்கொண்டதாக சிங்கப்பூரின் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது.

அந்தக் கேக் கலவையை வாங்கியிருந்தால் அதை உட்கொள்ளவேண்டாம் என அது எச்சரித்தது.
 

Top