Images
  • California Boat Singaporean
    (படம்: Geetajeet Kaur)

கலிஃபோர்னியா படகுத்தீ : மாண்டோரில் ஒருவர் சிங்கப்பூரர் என்பது உறுதி


கலிஃபோர்னியாவில் படகு தீப்பற்றியதில் மாண்டோரில் ஒருவர் சிங்கப்பூரர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2 அன்று முக்குளிப்பாளர்களுக்கான 'Conception' எனும் படகு தீப்பற்றியதில் 34 பேர் மாண்டனர்.

அவர்களில் ஒருவர் 45 வயது டாக்டர் சுனில் சிங் சந்து எனும் சிங்கப்பூரர்.

மரபணுச் சோதனை வழி அவருடைய அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் சிங்கின் நல்லுடலைத் தகனம் செய்ய, வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14) அன்று அமெரிக்கா செல்லவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் CNAவிடம் தெரிவித்துள்ளனர்.  

Top