Images
  • Caltex (1)
    (படம்: Google Street View)

கால்டெக்ஸ் பெட்ரோல் நிலைய சம்பவம்: காவல் துறையிடம் BMW ஓட்டுநர் புகார்

சிங்கப்பூர்: கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்தில் BMW ஓட்டுநருக்கும், முதிய ஊழியருக்கும் இடையே நடந்த சம்பவம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று காவல் துறை இன்று (ஏப்ரல் 16) தெரிவித்துள்ளது.

BMW ஓட்டுநர் தமது வாகனத்தை மறுநாள் மாற்றவிருந்ததால்  அளவுக்கு அதிகமாகப் பெட்ரோல் நிரப்ப விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் கூறியதைத் தவறுதலாக ஊழியர் புரிந்து கொண்டதாகவும் ஓட்டுநர் உண்மையாகத் தமது வாகனத்தை மாற்றவிருந்ததாகவும் காவல்துறை உறுதிசெய்துள்ளது.

இருப்பினும், தமது தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பரவி வருவதால், வாகன ஓட்டுநர் தமது நலனைக் கருதி காவல் துறையிடம் புகார் செய்துள்ளார். 

தம்பனீஸ் அவென்யூ 8இல் உள்ள அந்த பெட்ரோல் நிலையத்தில் BMW ஓட்டுநர் $135 பெறுமானமுள்ள பெட்ரோலை நிரப்பி $10 மட்டும் கட்டணம் செலுத்தியதாகக் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

மீதம் உள்ள $125 தொகையை முதிய ஊழியர் கட்டினார் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவத்தைப் பற்றி அறிந்தவர்கள் BMW ஓட்டுநரைக் குறைகூறிப் பதிவுக்குப் பதில் எழுதியிருந்தனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதால், அதில் தொடர்புடையவர்கள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதைப் பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.    
 

தொடர்புடையவை: 

பெட்ரோல் கொள்கலனை முழுமையாக நிரப்ப $10 கட்டிய வாகனமோட்டி, மிச்சப் பணத்தைக் கட்டியது யார்?

உங்கள் கருத்து

Top