Images
  • exam paper
    (படம்: CHARLY TRIBALLEAU / AFP)

கேம்பிரிட்ஜ் அமைப்புடன் இணைந்து செயல்படுவது நன்மையே: கல்வியமைச்சர் ஓங்

சிங்கப்பூரின் தேசியத் தேர்வுத்தாள்களின் மதிப்பீட்டை கேம்பிரிட்ஜ் அமைப்பு தொடர்ந்து செய்யும் எனக் கல்வியமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

GCE சாதாரணநிலை உயர் கணக்குத் (Additional Mathematics) தேர்வுத்தாள்கள் காணாமற்போன சம்பவத்தைத் தொடர்ந்து அதைக் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 11) அவர் பேசினார்.

உலகில் இருக்கும் பல்வேறு பெயர்பெற்ற அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்வது, அவற்றுடன் சேர்ந்து பணியாற்றுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் தேர்வுத்தாள்களை மதிப்பீடு செய்ய வசதிகள் இருந்தாலும்கூட, கேம்பிரிட்ஜ் போன்ற வெளிநாட்டு அமைப்புகளால் மதிப்பிடப்படும் போது சிங்கப்பூரின் கல்விக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைப்பதாகத் திரு. ஓங் குறிப்பிட்டார்.

ஆகையால், கேம்பிரிட்ஜ் அமைப்புடன் இணைந்து செயல்படுவது நன்மையே என அவர் கூறினார். 

Top