Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியாவிற்கான வழக்கமான விமானச் சேவைகளில் செல்லும் பயணிகளுக்கான நடைமுறை என்ன?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் 8 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் வழங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் 8 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் வழங்கவுள்ளது.

சென்னை, டில்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கான பயணச் சேவைகள் சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் வரும்.

அவற்றுடன் மேலும் சில இந்திய நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவை வழங்கப்படும்.

(படம்:Jeremy Long)

சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ் அல்லாமல், இந்தியாவிற்கான வழக்கமான விமானச் சேவைகளை நாடும் பயணிகளுக்கான நடைமுறை என்ன?

அவர்கள் இரண்டாம் கட்ட நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட பயண, சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டும்.

--புறப்படுவதற்கு அதிகபட்சம் 2 நாள்களுக்கு முன்பு COVID-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

--கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யும் பரிசோதனை முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும்.

படம்: REUTERS

எந்த விதமான COVID-19 பரிசோதனை?

--பயிற்சி பெற்ற நிபுணரால் மேற்கொள்ளப்படும் ART பரிசோதனை

அல்லது

--PCR பரிசோதனை

அங்கீகரிக்கப்பட்ட மருந்தகத்தில் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

பரிசோதனை முடிவுகள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

பரிசோதனை முடிவுகளில்:

--பரிசோதனை செய்யப்பட்ட தேதி

--பயணியின் பெயர்

--பிறந்த தேதி அல்லது கடப்பிதழ் எண்

ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூர் வந்தவுடன் 7 நாள் தனிமைப்படுத்தும் உத்தரவு.

--குடியிருப்பு இடம்

--பதிவு செய்துகொண்ட ஹோட்டல்

--வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு

ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் உத்தரவை நிறைவேற்றலாம்.

உத்தரவுக் காலம் முடிவதற்குமுன் PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்