Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புற்றுநோய் உயிரணுக்களைக் கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய தொழில்நுட்பம்

புற்றுநோய் உயிரணுக்கள் பற்றி ஆய்வு நடத்தி அவற்றைக் கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் கண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
புற்றுநோய் உயிரணுக்களைக் கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய தொழில்நுட்பம்

(படம்: A*STAR’s Genome Institute of Singapore)

புற்றுநோய் உயிரணுக்கள் பற்றி ஆய்வு நடத்தி அவற்றைக் கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் கண்டுள்ளது.

A*STAR நிறுவனம், சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம், Fluidigm Corporation நிறுவனம் ஆகியவை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் உயிரணுக்களின் நிலை மாற்றத்தைக் கண்காணித்து அவை மருந்துகளுக்கு எதிராக எவ்வாறு மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வுகளைக் காண இயலும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்