Images
  • cancer drug for covid Topotecan
    (படம்: National University Cancer Institute, Singapore)

COVID-19 நோய்த்தொற்றால் ஏற்படும் நுரையீரல் வீக்கத்தைப் புற்றுநோய் மருந்து குணப்படுத்தக்கூடும்: சிங்கப்பூர்-அமெரிக்க ஆய்வு

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Topotecan எனும் மருந்து, COVID-19 கிருமித்தொற்றுச் சிகிச்சையில் பயன்படுத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்தும் ஆய்வில் அது கண்டறியப்பட்டது.

ஆய்வுக்கூட விலங்குகளின் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை
அந்த மருந்து கட்டுப்படுத்தியது.

அதன் மூலம், நோய்த்தொற்றின் தீவிரம், இறப்பு விகிதம் ஆகியவை குறைந்ததாகக் கண்டறியப்பட்டது.

மனிதர்களுக்கான COVID-19 சிகிச்சையிலும் அது பயன்படுத்தப்படலாம் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய்க் கழகம் (National University Cancer Institute, Singapore-NCIS) தெரிவித்தது.

மனிதர்களுக்கான சிகிச்சைக் குறித்த பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவை விரைவில் உலகெங்கும் உள்ள மருத்துவத் தளங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று NCIS கூறியது.

NCIS, அமெரிக்காவின் Icahn மருத்துவப் பள்ளி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் Cell எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டன.  

Top