Images
  • cane
    கோப்புப் படம்: Jeremy Long

காதலியைப் பிரம்பால் பலமுறை அடித்துத் துன்புறுத்திய ஆடவருக்குச் சிறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

காதலியைப் பிரம்பால் 40 முறை அடித்த ஆடவருக்கு 7 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 25 வயது ஆடவர், காதலியைச் சரமாரியாகப் பிரம்பை வைத்து அடித்திருக்கிறார்;

தம்முடன் தங்க மறுத்த காதலியிடம், அவரது குடும்பத்தைத் துன்புறுத்தப் போவதாக ஆடவர் மிரட்டினார்.

காதலியின் குடும்பத்தை அச்சுறுத்தியது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது, பெண்ணை மானபங்கப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

அவற்றை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.

ஆடவர் ஓரளவு மனநிலை பாதிக்கப்பட்டவர்; இருந்தாலும் அவரது மனநிலைக்கும், குற்றத்துக்கும் தொடர்பில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.


Top